கடற்றொழிலாளர்கள் சங்கம் நிதானமாக நடக்க வேண்டும்


இலங்கைக் கடற்பகுதிக்குள் அத்துமீறி இந்திய மீனவர்கள் வருவதைக் கண்டித்து கடற்றொழிலாளர் சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று அறவழிப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக் குள், அதிலும் குறிப்பாக வடபுலத்துக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதால், வடபுலத்து கடற்றொழிலாளர்கள் சொல் லொணாத் துன்பத்தை அனுபவிக்கின்றனர்.
இது தொடர்பில் இந்தியப் பிரதமர் மோடி வரை முறையீடு செய்யப்பட்டு விட்டது. ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற செய்திகள் வந்து கொண்டிருகின்றனவாயினும் அத்துமீறல்கள் இன்னமும் நின்றபாடில்லை. எனவே இந்திய மீனவர்களின் இலங்கைக் கடல் பிரவேசம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன் இந்த விடயத்தை இரு நாட்டு மத்திய அரசுகளும் ஒருமித்து விரை வாகச் செய்வது அவசியம். 
அதேநேரம் இலங்கைக் கடற்பரப்புக்குள் இந் திய மீனவர்களின் அத்துமீறல் என்பதற்குள், எங்கள் தமிழகச் சகோதரர்களும் சம்பந்தப்படுவதால் இது தொடர்பில் மிக நிதானமான போக்கை நாம் கடைப்பிடிப்பது மிகவும் அவசியமானதாகும்.
எனவே இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வட மாகாண கடற்றொழிலாளர்கள் செய்கின்ற அறவழிப் பேரணி மிகவும் நிதானமாக இடம் பெற வேண்டும் என்பது அனைவரதும் விருப்பமாகும்.
ஏனெனில் நடைபெறும் பேரணியில் தமிழக சகோதரர்களுக்கு எதிராகக் கோ­ம் எழுப்புவ தற்கு சில தீய சக்திகள் முனையலாம். 
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியவர்கள் தமிழகத்தில் இருக்கக் கூடிய எங்கள் சகோதரர்கள். தமிழக சட்ட சபையில்  அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஏகமனதாக எடுத்த தீர்மானம் என்றால் அது எங்களுக்கானதா கவே இருக்க முடியும்.
இது தவிர, எங்கள் இனத்தின் அவலம் கண்டு தன்னுயிரை நீத்த சசோதரன் முத்துக்குமாரு உள்ளிட்ட தமிழக உடன் பிறப்புக்களின் தியாகங்களுக்கு நாம் எந்த வகையிலும் மாசு கற்பித்து விடக் கூடாது.
இலங்கைத் தமிழினத்தின் ஒரே பலம் தமிழக சகோதரர்கள் என்பதை நாம் ஒருபோதும் மறந்து விட முடியாது.
இது தவிர ஐ.நா மனித உரிமைகள் பேரவை யின் கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடந்து கொண்டி ருக்கையில், இலங்கை தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்படவும் வாக்கெடுப்புக்கு விடப்படவும் இருக்கின்ற வேளையில், இந்திய மீனவர்களுக்கு எதிராக நடத்துகின்ற பேரணியை அமைதியாக நடத் துங்கள் என்பதே நம் தாழ்மையான கோரிக்கை. 
ஏனெனில் நாங்கள் அறவழியில் பேரணிகளை நடத்த, அதனை வேறு திசையில் திருப்பி எங்களுக்கும் தமிழகத்துக்கும் இருக்கக் கூடிய உறவுகளை சிதைக்கச் சில தீய சக்திகள் முனையலாம் என்பதால்; ஏற்பாட்டாளர்கள் மிகவும்  நிதானமாக-அமைதியாக-கோ­ங்களைத் தவிர்த்து தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதே உகந்ததாகும்.      
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila