தர்மத்தின் வெற்றிக்காக வலம்புரிச் சங்கு ஒலிக்கும்


அன்பு வாசகர்களுக்கு வணக்கம். கடந்த சில நாட்களாக வலம்புரிக்கு ஏகப்பட்ட தொலை பேசி அழைப்புகள் வந்தவண்ணமுள்ளன.

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம், உள்ளூ ராட்சி சபைத் தேர்தல், அரசியல் கட்சிகளின் கூட்டு இவை தொடர்பில் அந்தக் கேள்விகள் அமைந்திருந்தன.
தொலைபேசி அழைப்பை எடுத்த அத்தனை பேரும் வலம்புரி என்ன சொல்கிறது. அதன் நிலைப்பாடு என்ன? என்ற கேள்விகளைக் கேட்டிருந்தனர்.

இச்சந்தர்ப்பத்தில்தான் வலம்புரி தனது நிலைப்பாட்டை தெரியப்படுத்த முன்வருகிறது.
12.11.2017 அன்று தமிழ் மக்கள் பேரவை யின் கூட்டம் நடைபெற்றது.
அதில் பேரவையின் தலைவரும் வடக்கின் முதலமைச்சருமாகிய சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஆற்றிய உரையை வலம்புரி தனது முன்பக்கத் தலைமைச் செய்தியாக தந்திருந்தது.

கூடவே தமிழ் மக்கள் பேரவையின் எழுத்து மூலமான அறிக்கையும் அப்படியே தரப்பட்டி ருந்தது.
தவிர, பேரவையில் இடம்பெற்றிருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் சார்ந்த சுரேஷ் பிரேமச்சந்தி ரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் ஊடகவியலாளர் மத்தியில் தெரிவித்த கருத் துக்களையும் வலம்புரி வெளிப்படுத்தியிருந்தது.

வலம்புரியைப் பொறுத்தவரை அது தனது நடுநிலையில் நின்று என்றும் விலகாது.
அதேவேளை யாருடைய செய்திகளையும் புறந்தள்ளியோ அன்றி திரிபுபடுத்தியோ அல் லது பொய்யான தகவல்களைப் பிரசுரித்தோ பத்திரிகைத் தர்மத்துக்குக் கேடு செய்ததும் இல்லை. செய்யப்போவதும் இல்லை.
பத்திரிகைத் தொழில் என்பது ஒரு தர்மம். அந்தத் தர்மத்தை ஆற்றும் நாம் அதிலிருந்து வழுவினால் அது பாவச் சொத்தாகும்.
அது ஊழ்வினையின் வடிவில் வந்துறுத் தும் என்பதில் நாம் நூறு வீத நம்பிக்கை கொண்டவர்கள்.

எனவே ஒருபோதும் செய்திகளைத் திரிபு படுத்தி, மக்களைக் குழப்பி, பொது அமைதிக்குப் பங்கம்  செய்யவோ அன்றித் தனி மனிதர்களின் மனதை நோகடிக்கவோ நாம் தயாரில்லை.
அதேநேரம் தர்மத்தை நிலைநாட்ட வேண் டிய நேரத்தில் அதனை நிலைநாட்டவும் வலம் புரி தயங்கியது கிடையாது.
இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். எங்கள் மக்கள் இழந்தவை ஏராளம்.
அதிலும் ஒரு வீட்டில் மூன்று பேர் நான்கு பேர் என்று யுத்தத்தில் உயிரிழந்த கொடுமை தாழ முடியாது.

ஏன், குடும்பம் குடும்பமாகக் கொல்லப்பட்ட துயரங்களும் வன்னிப்போரில் நடந்துள்ளன.  இப்பெரும் பாவச் செயல் நடந்திருக்கும் வேளை யில்; நாங்கள் எங்கள்பாட்டில், எங்களுக்கு ஏற்ற பாட்டில் செய்திகளைப் பிரசுரிப்பதும் அதன் வழி மக்களைக் குழப்புவதும் மகாபாவம்.
ஆகையால் வலம்புரி சரியான செய்தி களைத் தர விரும்புகிறது. அந்தச் செய்திகள் எங்கள் மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும்.
இந்த உண்மை மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பதற்கு ஆதாரமாக இருக்க வேண்டும். இந்தக் குறிக்கோளோடு வலம்புரி தனது பணி யைத் தொடரும்.
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி என்ற வள்ளுவன் நெறியில் தர்மத்தின் வெற்றிக்காக வலம்புரிச் சங்கு ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila