ஆதலால் வல்வை மண்ணை கேவலமான அரசியல் வாதிகளிடம் இருந்து காப்பாற்றுவோம் – வல்வெட்டித்துறை சுயேட்சைக் குழு!


valvai

வல்வெட்டித்துறை உள்ளூராட்சி மன்றத்திற்குள் உட்பட்ட ஊர்களில் வசிக்கும் வாக்காளப் பெருமக்களிடம் அன்பானதும் தாழ்மையானதுமான ஒரு வேண்டுகோளை வைக்கின்றேன் எனத் தெரிவித்து வல்வெட்டித்துறை சுயேட்சைக்குழுவின் சார்பில் சிறிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் மேலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நடக்கவிருக்கின்ற உள்ளூராட்சித் தேர்தலுக்கு அரசியல் கலப்பு, பணத்தாசை, பதவியாசை இல்லாத முற்று முழுதாக தமிழ்ப்பற்றும் தமிழினப்பற்றும் ஊர் அபிமானமும் கொண்ட சுயேச்சை வேட்பாளர்களை ஒரு குழுவாக ” வல்வை மக்கள் மன்றம்” என்ற பெயரில் களம் இறங்குகியள்ளார்கள் வல்வை வாழ் அறிவு ஜீவிகள், படிக்காத மேதைகள், தமிழ் மொழி மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுக்கொண்டவர்கள். ஆதலால் உங்கள் எல்லோரது முழு ஆதரவையும் அவர்களுக்கு வழங்கி தேர்தலில் வெற்றியீட்ட வைக்க வேண்டும்.
காரணம்:
1.) கடைசியாக இருந்த சபையில் ஒரு பிரபல கட்சியின் பேரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தங்களுக்குள்ளேயே பதவி மோகத்தில் சண்டையிட்டு எங்கள் ஊரை நாற வைத்தார்கள் என்பது உலகறிந்த உண்மை.
பின்னர் இவர்களுடைய பிரச்சனையை கட்சியின் மேலிடத்திற்கு நீதியான தீர்ப்பைப் பெறுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அந்த முதுகெலும்பில்லாத மேலிடம் சரியான தீர்ப்பை கொடுக்கத் திராணியில்லாமல்பெட்டைத்தனமாக சபையைக் கலைத்தைவிட்டனர். இவர்கள் யார் எங்கள் ஊரைப் பற்றித் தீர்மானிப்பதற்கு. இந்தக் கேவலம் மீண்டும் ஒரு முறை அரங்கேற நாம் அனுமதிக்கக் கூடாது.
அதனால்தான் அரசியல் கலப்பற்ற ஊர் அபிமானம் உள்ள தன்னலமற்ற சுயேச்சைக் குழுவான ” வல்வை மக்கள் மன்றம்” களம் இறங்கியிருக்கிறார்கள்.
2) எமது ஊரைப் பொறுத்த வரை இங்குள்ள வைத்தியசாலை, பாடசாலைகள், வாசிகசாலைகள், கோவில்கள் சிறுவர் பாடசாலைகள் ( இப்பொழுதும் ஒன்று நிறுவப்பட்டுக்கொண்டிருக்கிறது) திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்கள்அனைத்தும் எமது மூதாதைகளாலும் தற்காலத்தில் உள்ளவர்களாலும் நிறுவப்பட்டு காலா காலமாகப் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. எங்களுக்குள்ளும் பிரச்சினைகள் வரும். அதை நாங்களே தீர்த்துக் கொள்ளுவம். எங்கடை ஊருக்கு அரசியல் கட்சிகளின் தலையீடு தேவையில்லை. அதுதான் பத்திரிகைகளிலை பார்க்கிறமே ஒரே கூட்டணியிலை உள்ள கட்சிகள் தங்களுக்குள் எப்படியெல்லாம்மோதிக்கொள்ளுகினம் என்று. ஆதலால்தான் அரசியல் கலப்பில்லாத சுயேச்சை வேட்பாளர்கள் எமது ஊரில் ” வல்வை மக்கள் மன்றம்” என்ற பெயரில் களம் இறங்குகின்றார்கள்.
ஆதலால் எங்கள் ஊரைக் கேவலமான அரசியல் வாதிகளிடம் இருந்து காப்பாற்றுவோம்.
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila