116 பவுண் நகைத் திருட்டு வழக்கு – விஜயகாந்தை குற்றவாளியாக நீதிமன்று தீர்ப்பு !

தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் யாழ் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந் 116 பவுண் நகைகளைக் கொள்ளையடித்ததாக தெரிவாகிய வழக்கொன்றில் யாழ் நீதவான் நீதி மன்றினால் குற்றவாளியாக தெரிவாகியுள்ளார்.

இவ் வழக்கு விசாரணை இன்று (04.01.2017) வியாழக்கிழமை நடைபெற்றது.  இதன்போது சுதர்சிங் விஜயகாந்தை குற்றவாளியென உறுதிப்படுத்திய நீதி மன்று தண்டனை வழங்குவதற்காக திகதியிட்டுள்ளதோடு அவரது கைவிரல் அடையாளம் பெறுவதற்காக கட்டளையிடப்பட்டுள்ளது. 

குறித்த நகைத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கொக்குவில் பகுதியிலுள்ள வங்கி உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் குறி த்த 116 பவுண் நகைகள் திருடப்பட்டிருந்தன. அந்த நகைகளையே அடகு வைத்த குற்றச்சா ட்டில் விஜயகாந் உட்பட நான்கு பேர் 2013 ஆம் ஆண்டு யூலை மாதம் 09 ஆம் திகதி கைது செய்ய ப்பட்டு யாழ். நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

வழக்கு விசாரணைகளின் பின் விஜயகாந் யூலை 25 ஆம் திகதி பொலிஸார் ஆட்சேபனை தெரிவி க்காததனால் யாழ்.மேல் நீதிமன்றினால் பிணை யில் விடுதலையானார். குறித்த வழக்கில் விஜயகாந்த ஈபிடிபி சார்பில் யாழ் மாநகரசபைத் தேர்தலில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் முறிய டிப்பு றெமீடியஸ் ஆஜராகி வந்திருந்தார். விஜயகாந் கைது செய்யப்படுவதற்கு முன்னரான காலப்பகுதியில் ஈபிடிபியின் உறுப்பினராகச் செயற்பட்டவர் என்பது யாவரும் அறிந்த உண்மையே. 

இதேவேளை குறித்த குற்றத்தின் பிரகாரம் 04 வருடங்கள் வரையான சிறைத்த ண்டனை விதிப்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதுடன் விஜயகாந் தேர்த லில் போட்டியிடுவது தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் போட்டி யிட்டு வெற்றி பெற்றாலும் பதவி இரத்துச் செய்யப்படுமெனத் தெரிவிக்கப்ப ட்டுள்ளது. 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila