6 மாதங்கள் சிறை­யி­லி­ருந்து நாடு திரும்­பிய இலங்­கைப் பெண் : நடந்தது என்ன?



சவூதி அரே­பி­யாவில் ஆறு மாதங்­க­ளாக சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த மட்­டக்­க­ளப்பு வாக­ரையை சேர்ந்த பெண்­ணொ­ருவர் கடந்த 31 ஆம் திகதி அன்று வீடு வந்து திரும்பியுள்ளார். 
வாகரை கண்­ட­ல­டியை சேர்ந்த மாரி­முத்து மகேந்­திராதேவி கொழும்­பி­லு ள்ள வெளி­நாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலை­ய­மொன்றின் ஊடாக கடந்த ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் சவூதி அரே­பியா சென்­றி­ருந்தார். 

மேலும் அவர் தெரிவிக்கையில், 

இரண்டு பிள்­ளை­களின் தாயா­ரான இவர் தனது குடும்ப வறுமை நிலை கார­ண­மாக 4.6.2013 இல் ச­வூ­தி­ அ­ரே­பியா சென்­றி­ருந்தார். சவூதி அரே­பியா சென்ற நான் அங்கு 6 மாதங்­க­ளாக ஒரு வீட்டில் பணிப்­பெண்­ணாக வேலை செய்த நேர த்தில் அந்த வீட்டார் எனது கட­வுச்­சீட்­டுடன் சவூ­தி­அ­ரே­பியா றியாத்­தி­லுள்ள முகவர் நிலை­யத்தில் என்னை ஒப்­ப­டைத்­தனர். 

பின்னர் அந்த முகவர் நிலை­யத்­தி­லி­ருந்து வெளி­யேறி பொலிஸ் நிலை­யத்­திற்கு சென்று முறை­யிட்டேன். பொலிஸார் வேறொரு வீட்­டுக்கு என்னை வேலைக்கு அனுப்பி அங்கு வேலை செய்த பின்னர் 17.7.2016 அன்று அந்த வீட்டை விட்டு வெளி­யேறி றியாத்­தி­லுள்ள இலங்கை தூது­வ­ரா­ல­யத்­திற்கு சென்ற போது அந்த தூது­வ­ராலயத்­தி­லுள்ள அதி­கா­ரி­க­ளுக்கு என்னை சமைப்­ப­தற்­காக பயன்­ப­டுத்­தினர். 

பின்னர் இலங்­கைக்கு எப்­ப­டி­யா­வது வர­ வேண்டும் என நான் மன்­றா­டிய போது சவூதி அரே­பி­யா­வி­லுள்ள வெளி­நாட்­ட­வர்­களை நாட்­டுக்கு அனுப்பும் சிறைச்­சா­லைக்கு அனுப்­பப்­பட்டேன். பின்னர் அங்கு ஆறு மாதங்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பின்னர் கடந்த 31.12.2017 அன்று எனது சொந்த வீட்­டுக்கு வந்து சேர்ந் ­துள்ளேன். அந்த தூது­வ­­ரா­ல­யத்­தி­லுள்ள அதி­கா­ரி­க­ளுக்கு நான் ஒரு வருடம் சமையல் வேலை செய்­துள்ளேன். 

ஆனால் ஒரு ரூபா கூட சம்­ப­ளம் எனக்கு தரவில்லை. எனது கணவர் கூலித் தொழில் செய்­பவர் எனது பிள்­ளையை படிப்­பிப்­ப­தற்கு மிகவும் கஷ்­டப்­பட்டு பாட­சாலை அதி­பரின் உத­வி­யுடன் மீண்டும் பாடசாலையுடன் இணைத்து ள்ளேன். எனது நிலை தொடர்பில் இலங்கையிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கும் முறைப்பாடு செய்துள்ளேன் எனத் தெரிவித்து ள்ளார். 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila