திருமலையில் முன்னணி:தமிழரசுக்கு பிணை?


thenna3
திருகோணமலையின் கண்டுகொள்ளப்படாத தமிழ் கிராமங்களை நோக்கி தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளது.திருமலையின் தென்னமராவடி உள்ளிட்ட கிராமங்களிற்கு முன்னணியின் தலைவர் பொ.கஜேந்திரகுமார் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பயணம் செய்து மக்களை சந்தித்தனர்.

சந்திப்பின் போது திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்பு மற்றும் அதனை கண்டுகொள்ளாத தமிழ் மக்கள் தலைவர்கள் தொடர்பில் மக்கள் தமது கருத்துக்களினை சீற்றத்துடன் முன்வைத்துள்ளனர்.
thenna1
இதனிடையே கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளரைத் தாக்குவதற்கு முயற்சித்த தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களை கிளிநொச்சி நீதிமன்றம் எச்சரித்து பிணையில் விடுதலை செய்துள்ளது.
கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் தங்களது பிரதேச தேர்தல் அலுவலகத்தை அமைக்கும் பணியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் ஒருவர் ஈடுப்பட்டிருந்தார். அதன்போது அலுவலகத்திற்கு உள்நுழைந்து அவரைத் தாக்குவதற்கு முயன்ற கிளிநொச்சி தமிழரசு கட்சியின் குறித்த பிரதேச வேட்பாளரின் ஆதரவாளர்கள் மூவரையே கிளிநொச்சி நீதவான் நீதின்றம் கடுமையாக எச்சரித்து பிணையில் விடுதலைசெய்தது.
குறித்த தாக்குதல் முயற்சி சம்பவம் கடந்த புதன் கிழமை பிரமந்தனாறு பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் உடனடியாக தர்மபுரம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். இதனையடுத்து பிரமந்தனாறு பிரதேசத்தின் தமிழரசு கட்சியின் வேட்பாளரின் ஆதரவாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டு வியாழக்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் சந்தேக நபர்களை தலா ஜம்பதாயிரம் ஆட் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம், தேர்தல் முடியும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாதவாறு நடந்துகொள்ள வேண்டும் என்வும் தெரிவித்து வழக்கை எதிவரும் மார்ச் மாதம் ஒத்தி வைத்துள்ளதுthenna3
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila