இளைஞர் மாநாடு ஒன்றை முதலமைச்சர் கூட்டவேண்டும்

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த 16ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்தாடல் நிகழ்வில், ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர் களின் விசேட உரையும் சிங்கப்பூர் பல்கலைக் கழக சட்டத்துறைப் பேராசிரியர் மு.சொர்ண ராசா, யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை தலை வர் கு.குருபரன் ஆகியோரின் கருத்துரையும் மக்களை ஈர்த்துள்ளன.
இத்தகைய கருத்தாடல் நிகழ்வுகளை வடக்குக்கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் தமிழ் மக்கள் பேரவை நடத்த வேண்டும் என்பது பலரி னதும் கோரிக்கை.

இதற்கு மேலாக, யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கை பல்கலைக் கழக நிர்வாகம் பேரவையின் நிகழ்விற்கு வழங் கியிருந்த போதிலும் அந்த அனுமதியை ரத்து செய்யும்படி விடுக்கப்பட்ட உத்தரவு சட்டத்திற்கு முரணானது எனில் அது தொடர்பில் சட்ட நட வடிக்கை எடுக்க வேண்டும்.

இது விடயத்தில் தமிழ் மக்கள் பேரவை சட்ட நடவடிக்கைகான உப குழுவொன்றை உருவாக்கு வது பொருத்துடையது என்பது நம் சிற்றறிவின் சிந்தனை.
நம் தமிழ் சட்டத்தரணிகள் அடங்கிய உப குழு ஒன்றை தமிழ் மக்கள் பேரவை உருவாக்கு மாக இருந்தால், எந்ததெந்த விடயங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அது விட யத்தில் அதிரடியாக சட்டநடவடிக்கை எடுக்க முடியும்.

குறிப்பாக முற்றவெளியில் புத்தபிக்கு ஒரு வரின் தகனக்கிரியை நடைபெற்றபோது அத னைத் தடுப்பதற்கு சட்டத்தரணிகள் அடங்கிய உபகுழு தமிழ் மக்கள் பேரவையிடம் இருந் திருக்குமாயின் குறித்த விடயம் தொடர்பில் உட னடி நடவடிக்கை எடுத்திருக்க முடியும்.
பல விடயங்களில் குழுவாக இயங்குவது  வெற்றி தரும் என்பது ஞாபகத்துக்குரியது. எனவே இது விடயத்தில் தமிழ் மக்கள் பேரவை கவனம் செலுத்தும் என நம்பலாம். 

தவிர இப்போது இருக்கின்ற சூழ்நிலையில்  அரசியலுக்கு அப்பால் எங்கள் ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களையும் ஒன்று திரட்டி ஒரு பெரும் தமிழ் இளைஞர் மாநாட்டை வடக்கின் முதலமைச்சர் நடத்தவேண்டும் என்பது நம் தாழ்மையான கருத்து. 
இது விடயத்தில் முதலமைச்சரை இணை தலைவராக கொண்ட தமிழ் மக்கள் பேரவை யும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் அமைப்பும், யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் சேர்ந்து இளைஞர்கள் மாநாட்டை கூட்ட முடியும்.

இதன் மூலம் தமிழ் மக்களின் உரிமை சார் விடயங்களில் நம் அரசியல்வாதிகள் நேர்மை யுடனும் விசுவாசத்துடனும் செயற்படுவதை  உறுதி செய்ய முடியும் என்பதால், 
தமிழர் தாயகத்தை ஒன்றிணைத்த இளை ஞர் மாநாட்டை முதலமைச்சர் நடத்துவார் என நம்பலாம்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila