புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை.

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் வன்புணர்வுக்குப் பின் படுகொலை .
வித்தியா கற்பழிப்பு காட்சிகள் வெளியானது எப்படி ..? நீதிமன்றில் மறைக்க பட்ட உண்மைகள் அம்பலம்.
வித்தியா கற்பழிப்பு காட்சிகள் வெளியானது எப்படி ..? நீதிமன்றில் மறைக்க பட்ட உண்மைகள் அம்பலம் .
புங்குடுதீவு மாணவி வித்தியா ஒன்பதுக்கு மேற்பட்ட கயவர்களினால் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டு
படு கோரமாக கொலை செய்யபட்டாள் .
ஆண்டு ஒன்று மறைந்த போதும் இன்றுவரை அவளுக்கு நீதி கிட்டவில்லை
வந்த வேகத்திலேயே தீர்ப்பை வழங்கி நபர்களை சிறைக்கு அனுப்பும் நீதிமன்றம் இவளது வழக்கில் மட்டும் இளுத்தடிப்பை மேற்கொள்கிறது
சட்டமும் ,அரசியலும் ஒன்றாக கலந்து மேற்படி பெண்ணின் நீதியை உறக்கமிட வைத்து குற்றவாளிகளை தப்பி வைக்கும்
தீவிர முயற்சிகள் திரைமறைவில் சூறாவளியாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன .
இந்த விடயங்கள் இவ்வாறு நடந்து கொண்டிருக்க மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பு
வெடிக்கிறது ,கால்கள் இரண்டும் இழுத்து கட்ட பட்ட நிலையில் ,கைகளும் கட்ட பட்ட நிலையில்
வாய்க்குள் அவளது உள்ளாடை திணிக்க பட்ட நிலையில் நிர்வாண கோலத்தில் கிடந்த வித்தியாவின் உடல்
நிழல் படமாக வெளியாகி அதனை சிங்கள ஊடகம் ஒன்று தலைப்பு செய்தியாக வெளியிட்டது
மேற்படி கற்பழிப்பு காட்சி படம் குறித்த ஊடகத்துக்கு எப்படி கிடைத்தது ..? இதனை அனுப்பி வைத்தவர்கள் யார் ..?
கைது செய்ய பட்டவர்களின் கைபேசிகள்,மற்றும் கணனியில் மேற்படி கற்பழிப்பு காட்சிகள் எதுவும் இல்லை என பொலிசார்
கையை விரித்தனர் அப்படி என்றால் மேற்படி காட்சி படம் மட்டும் குறித்த ஊடகத்துக்கு கிடைத்தது எப்படி ..?
கைபேசியில் ,கணனியில் இருந்த ஆதாரங்கள் அழிக்க பட்டதாக பொலிசார் தெரிவித்தமைக்கு கரணம் இதுவாக உள்ளது என்பதே தான் வெளிப்படை .

வடமாகாண போலிஸ் கட்டளை அதிகாரி சுவிஸ் குமாரை காப்பாற்றி தமிழ் மாறனுடன் செல்ல உடைந்தையாக விளங்கினார்
தமிழ்மறான் ஊடகங்கள் முன்பாகவும் ,மக்கள் சிறை பிடித்த நிலையில் விடயம் பூதாகரமாக வெடித்தது
மேற்படி மக்கள் கொந்தளிப்பை தமிழ்மறான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை .
இந்த நிலையில் சுவிஸ்குமாரை காவல்துறை பாதுகாப்புடன் தமிழ்மாறன் அனுப்பி உதவிய மேற்படி
போலிஸ் அதிகாரியை காப்பாற்றவே குற்றவாளிகள் கைபேசி மற்றும் கணனியில் இருந்த காட்சிகள் திட்டமிடபட்டு அழிக்க பட்டு விட்டன என
தெரிகிறது ,போலீசார் காட்சி தடயங்கள் அழிக்க பட்டதாக தெரிவித்துள்ளனர் இதுதான் உள்ளக ரீதியாக் இடம்பெற்றுள்ளது .

காவல்துறை அதிகாரி மேற்படி வழக்கில் சிக்கினால் அது இலங்கை காவல் துறைக்கே அசிங்கம் என்ற நிலையில் அந்த தளபதியை காப்பாற்றும் முகமாக நடக்கும்
உள்ளக சித்து விளையாட்டே நீதிபதிகள் அரசியல் செல்வாக்குடன் மாற்ற பட்டதும் அதன் தொடர்ச்சியாக மேற்படி குற்றவாளிகளின்
மரபணு அறிக்கை தள்ளி போனதும் காரணமாகும் .
சாதரன மக்களுக்கே மேற்படி விடயம் தெளிவாக புரியும் போது இதனை விசாரிக்கும் நீதிபதிகள் ,மற்றும் வித்தியா தரப்பில் ஆயராகிய சட்டத்தரணிகள் ,மற்றும் அரச சட்டத்தரணிகள் ஏன் இதனை நீதிமன்றிலே கேட்காமல் போயினர் என்ற பொதுவான கேள்வி எழுகிறது

மக்களினால் கட்டிவைக்க பட்ட சுவிஸ் குமார் எப்படி யாழ் மருத்துவமனைக்கு சென்றான் அங்கிருந்து எப்படி தப்பித்தான் ,இவனை தப்பிப்போக வழி
செய்து கொடுத்தது யார் ..? தமிழ் மாறன் நாப்பது லட்சம் ரூபாய்கள் பெற்றுக்கொண்டது எப்படி ..? என்ற கேள்விகள் தொடர்ந்து துளையிடுகின்றன .
தவராசாவும் ,தமிழ்மாறனும் வித்தியா கொலை சூத்திரதாரியாக விளங்கும் சுவிஸ் குமாரை
காப்பாற்ற தீவிர முயற்சிகள் மேற்கொள்வது ஏன் ..?
இவர்களுக்கு மகிந்தாவின் அடிவருடியாக விளங்கும் புலி குட்டி என்பவன் துணை நிற்பதற்கான கராணம் என்ன ..?
தற்போது ஒரு தலை காதல் என்ற நிலையில் மேற்படி கூட்டு கொலை இடம்பெற்று இருப்பதான தோற்றபட்டை ஏற்படுத்துவான் நோக்கம் என்ன ..?
யாழ்ப்பாணத்தின் உச்ச நீதிமன்றம் மேற்படி குற்றவாளிகள் நிரபராதிகள் என்ற வகையில் விடுதலை செய்யுமா ..?
போலீசார் தங்களை மிரட்டி தண்டித்து பொய் வாக்குமூலம் பெற்றனர் என குற்றவாளிகள் சிலர் தெரிவித்து இருந்தனர்
மேற்படி குற்ற சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்க படுகிறது
மேற்படி குற்றவாளிகளை நீதிமன்றில் ஆயராக்கும் போது கெட்ட வார்த்தையால் ஊடக நபர்களை திட்டி சென்றதில் இருந்து குற்றவளைகளின் மனோ நிலையும்
அவர்களின் மனித பண்பியலும் அப்பட்டமாக வெளிபட்டது
சாதரான மக்கள் வாழ்வில் இருந்து மாறுபட்டு சமுக விரோத செயலில் இவர்கள் சிந்தனை அகல கால் ஊன்றியதை அவர்களது
இந்த பேச்சின் வாயிலாக பார்க்க முடிந்தது .
யாழ்பாண நீதிமன்றம் தமிழ்மறான் ,தவராசா ,வித்தியா கற்பழிப்பு குற்றவாளிகளை
உரிய முறையில் விசாரித்து தண்டனை வழங்குமா ..? அரசியல் அழுத்தம் தவிர்த்து சட்டத்தை மதித்து தமிழர்
பண்பியலை ,கலாசாரத்தை மதித்து இந்த சமுக விரோதிகளின் படுபாத செயலுக்கு தக்க தண்டனை வழங்கப்படுமா ..?
பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் ,மற்றும் துவாரகேசவரன் போன்றவர்கள் சுவிஸ் குமாரை பிடித்து காவல்துறையில்
கொடுத்தனர் அங்கிருந்து இவன் எப்படி கொழும்புக்கு தப்பினான் என்ற விடயங்கள் அம்பல படுத்த படுமா …?
இவனது தப்பித்தலுக்கு உதவி புரிந்த தமிழ் மாறன் போலிஸ் அதிகாரி மற்றும் பாதுகாப்பிற்கு சென்ற சக போலீசார் மீது
விசாரணை நடத்த பட்டு அவர்களும் சிறையில் அடைக்க படுவார்களா ..?
மேற்படி மக்களின் மனங்களில் உள்ள கோப கேள்விகளுக்கு யாழ்ப்பாண உச்ச நீதிமன்றம் தகுந்த நீதியை வழங்குமா ..?
அமைதி பூங்காவாக திகழ்ந்த காலச்சார பட்டினமாக போற்ற பட்ட யாழ்ப்பாணத்தில் இது போன்ற கோர நிகழ்வுகள்
எதிர்காலத்தில் நடக்கவிடாது நீதிமன்றம் தடுக்குமா ..?உச்ச நீதிமன்ற நீதிபதி இதனை துணிவோடும் ஆளுமையுடனும் புரிவாரா ..?
சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி குற்றவாளிகளை தப்பிக்க வைக்க படும் முயற்சிகளை தடுப்பாரா .>?
பல அரசியல் அழுத்தம் மற்றும் சவால்களை முறியடித்து நீதியின் பால் நின்று ஐயா கவுரவ இளஞ்செழியன் அவர்கள் மக்கள் எதிர்பார்க்கும் நீதியை வழங்குவாரா ..?
கருப்புடை தரித்த சமுக போராளியாக ,ஒரு நடமாடும் சட்ட பிரபாகரன் என போற்ற படும் இளஞ்செழியன் மேற்படி தீர்ப்பு உலக வரலாற்றில்
பதிக்க படுமா ..?
,சட்டத்தரணிகள் ,மற்றும் பொலிசாருக்கு எதிராக தீர்ப்பை வழங்குவாரா ..?
அல்லது இவரும் வரும் வாரத்தில் அல்லது மாதத்தில் உச்ச நீதிமன்ற பதவி பறிக்க பட்டு இடம் மாற்ற படுவரா ..?
புலம் பெயர் தமிழ் மக்கள் ஆவலுடன் இந்த வழக்கி எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர் .
நீதி சாகடிக்க படுமா ..? அரசியல் ஆதரவுடன் தமிழ்மாறன் ,தவராசா ,போலிஸ் அதிகாரிகள் ,மற்றும் குற்றவாளிகள் தப்பிக்க படுவார்களா …?
யாழ்ப்பாண உச்ச நீதிமன்றம் எடுக்க போகும் அந்த அதிரடி முடிவுகளை ஏக்கத்துடனும் ,எதிர் பரப்புடனும் பார்த்த படி தமிழ் சமுகம் மட்டுமல்ல உலக சமுதாயம்
மனித உரிமை ஆர்வளர்களும் எதிர் பார்த்த படி உள்ளனர் .
அவலமாக சாகடிக்க பட்ட அப்பாவி மாணவிக்கு உரிய தீர்ப்பு கிட்டுமா …? அல்லது இது போன்றசமுகவிரோதிகள்
காமுக கும்பல் தமிழர் மண்ணில் படையெடுத்து ஒட்டுமொத்த மனித சமுதாயத்தை மிரட்ட மேற்படி நீதிமன்றம் அனுமதிக்குமா ..?
ஒரு நாட்டையே உலுப்பிய குற்றத்தை ,குற்றவாளிகளுக்கும் உதவிய தமிழ்மாறன் ,தவராசா போலிஸ் அதிகாரிகளை ,அரசியல் வாதிகளை
யாழ்ப்பாண உச்ச நீதிமன்றம் தகுந்த தண்டனை வழங்கி சிறையில் அடைக்குமா ..?
வித்தியாவின் கொலையின் பின்புலத்தில் புதைந்து கிடைக்கும் பல மர்மங்களை யாழ்ப்பாண உச்ச நீதிமன்றம் உடைத்து
அம்பலமாக்குமா ..?
காத்திருப்போம் தீர்ப்புவரும் நாள்வரை ….!




20/07/2017
வித்தியா கொலையில் முக்கிய சாட்சியம்! முதன்முறையாக நீதிமன்றில் சிறப்பு அதிரடிப் படையினர் குவிப்பு


27/09/2017வித்தியா கொலை! தீர்ப்பு சற்றுமுன் வெளியானது! ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila